அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை அருகில் மண்சரிவு: எம்எல்ஏ நேரில் ஆய்வு

அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை அருகே பெய்த கன மழையால் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் ரோட்டில் ஏற்பட்ட விரிசலை, எம்எல்ஏ நேரில் ஆய்வு செய்தார்.;

Update: 2021-10-18 09:45 GMT

வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து தாமரைக்கரை செல்லும் வழியில் உள்ள மலை பகுதி சாலையின் ஓரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து,  தாமரைக்கரை செல்லும் வழியில் உள்ள மலைப்பகுதி சாலையின் ஓரத்தில், நேற்று பெய்த கனமழை காரணமாக,  மண் சரிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, இந்த சாலையில் விரிசல் உண்டானது.

இது குறித்து தகவல் அறிந்ததும், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ ஜி வெங்கடாசலம், அப்பகுதிக்கு விரைந்தார். சாலையில் ஏற்பட்டுள்ள விரிசலை நேரில் பார்வையிட்டார்.


சாலையில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்வது குறித்து, எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். பின்னர், கொங்காடை ஓசூர், போன்ற பகுதிகளில் தார்சாலை வசதிகளை அமைத்துத்தர வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று,  உரிய அதிகாரிகளுடன்  அப்பகுதிகளிலும் எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

Tags:    

Similar News