கெட்டிசமுத்திரம் ஏரியின் நீர்மட்டம் உயர்வு

அந்தியூர் அருகே உள்ள கெட்டிசமுத்திரம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

Update: 2021-10-29 01:15 GMT

கெட்டிசமுத்திரம் ஏரி

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில்,  கடந்த ஒரு மாதமாக, மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வரு கிறது. இதனால் அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் உயர்ந்து அதன் முழு கொள்ளளவை எட்டியது. எனவே, வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து உபரிநீர் வெளியேறி வருகிறது.

இந்த உபரிநீரானது அந்தியூர் பெரிய ஏரி மற்றும் கெட்டிசமுத்திரம் ஏரிக்கு சென்றது. இதனால் 18 அடி உயரம் கொண்ட கெட்டிசமுத்திரம் ஏரியின் நீர்மட்டம் 8 அடியாக உயர்ந்து உள்ளது. இதேபோல், 17 அடி உயரம் கொண்ட அந்தியூர் பெரிய ஏரியின் நீர்மட்டம் 7 அடியாக உயர்ந்து உள்ளது. தொடர்ந்து அந்தியூர் மற்றும் பர்கூர் பகுதியில் மழை பெய்தால், இந்த ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டிவிடும் என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

Tags:    

Similar News