அந்தியூர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திரா காந்தி பிறந்தநாள் விழா
அந்தியூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில், முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் காந்தி மைதானத்தில், நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில், முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் 105வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், நகரத்தலைவர் ஜலாலுதீன் தலைமையில், மாவட்ட பொதுச் செயலாளர் பாசம் மூர்த்தி, இந்திரா காந்தியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து, நகர துணைத் தலைவர் பொண்ணுபையன், கே எம் எஸ் பூபதி, டாக்டர் ராகவேந்திரன், சுந்தரவடிவேல், மூர்த்தி, வெங்கடேஷ், சிவாஜி மன்ற தலைவர் கணேசன், மகளிர் அணி தலைவி முத்தம்மாள், சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்.