பர்கூர் மலைப்பாதையில் ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
மரம் விழுந்த தகவல் கிடைத்ததும் மீட்புக் குழுவினர் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதிகளில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. தொடர் மழை காரணமாக பர்கூர் மலைப்பகுதியில் கடந்த வாரம் 4 முறை ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தது. இதனால் அந்தியூர்- மைசூரு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பல்வேறு மலைக்கிராமங்களுக்கும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து ராட்சத பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. மேலும் மண் சரிவுகளும் தடுப்புகள் அமைத்து சரி செய்யப்பட்டு போக்குவரத்து தொடங்கியது. ஆனாலும் வாகன ஓட்டிகள் மெதுவாக வாகனங்களை இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது தொடர் மழை பெய்ததால் பர்கூர் மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் ரோடுகளில் சரிந்து விழும்போல் மரங்கள், பாறைகள் தொங்கிக் கொண்டு இருந்தன.
இந்நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் தாமரைக்கரையில் இருந்து 2-வது கிலோமீட்டர் தொலைவில் ஒரு ராட்சத மரம் விழுந்தது. இதனால் பர்கூர்-மைசூரு இடையே போக்குவரத்து பாதிக்கப் பட்டது. மரம் விழுந்த நேரத்தில் வாகனங்கள் ஏதும் வராததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. மரம் விழுந்த தகவல் கிடைத்ததும் மீட்புக் குழுவினர் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சுமார் 3 மணி நேரத்துக்கு பின்பு போக்குவரத்து தொடங்கியது.மரம் விழுந்த தகவல் கிடைத்ததும் மீட்புக் குழுவினர் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து சுமார் 3 மணி நேரத்துக்கு பின்பு போக்குவரத்து தொடங்கியது.தொடர்ந்து மலைப்பாதையில் அபாயகரமாக இருக்கும் மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.