அம்மாபேட்டை அருகே பல வருடங்களுக்கு பிறகு நிரம்பிய பூனாச்சி ஏரி

அம்மாபேட்டை அருகே பல வருடங்களுக்கு பிறகு பூனாச்சி ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.;

Update: 2021-11-16 02:00 GMT

நிரம்பி வழியும் பூனாச்சி ஏரி.

அம்மாபேட்டை அடுத்துள்ள பூனாச்சியில் 38 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. அம்மாபேட்டை அடுத்துள்ள முகாசிப்புதூர், அட்டவனைப்புதூர் ஆகிய கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பூனாச்சி ஏரி தண்ணீரை நம்பித்தான் உள்ளன. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக இந்த ஏரி நிரம்பாமல் இருந்தது. இந்நிலையில் ஒரு வாரமாக வடக்கிழக்கு பருவமழை வெளுத்து வாங்கியது. அம்மாேபட்டை பகுதியிலும் மழை பெய்ததால் பூனாச்சி ஏரி தன் முழு கொள்ளவை எட்டியது. இதனால் நேற்று உபரிநீர் வெளியேறி அருகே இருந்த விவசாய தோட்டங்களுக்குள் புகுந்தது. வாழை, சோள பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. ஏரி அருகே உள்ள செந்தூர் நகர் செல்லும் வழியில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் வீடுகளுக்கு செல்லவும், வெளியே வரவும் சிரமம் ஏற்பட்டு உள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு பூனாச்சி ஏரி நிரம்பியதால் சுற்றுவட்டார விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வந்து பார்த்து செல்கின்றனர்.

Tags:    

Similar News