காட்டு யானை தாக்கி விவசாயி படுகாயம்..!

அந்தியூர் அருகே காட்டு யானை தாக்கியதில் விவசாயி படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-05-07 08:45 GMT

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கோவிலூர், செலம்பூர் அம்மன் கோவில் தோட்டத்தை சேர்ந்தவர் விவசாயி வெங்கடேஸ்வரன். இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வாழை, கரும்பு, மஞ்சள் போன்றவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை அவர் தனது விவசாய நிலத்தில் இருந்த போது அருகில் இருந்த வனப்பகுதியில் இருந்து ஒரு காட்டு யானை வெங்கடேஸ்வரனை நோக்கி வந்தது. இதனால் பயந்து வெங்கடேஸ்வரன் ஓடினார். ஆனால் யானை தொடர்ந்து விடாமல் துரத்தி வந்து வெங்கடேஸ்வரனை தாக்கியது.

இதில் அவரின் வலது கை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் யானையை சத்தம்போட்டு வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். மேலும் அப்பகுதியினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து, வெங்கடேஸ்வரனை அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அந்தியூர் வனத்துறையினர் அப்பகுதியில் உள்ள விவசாயிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இது குறித்து அப்பகுதியில் உள்ள விவசாயிகள் தெரிவிக்கையில் இந்த பகுதியில் தொடர்ந்து இதே போன்று யானைகளால் தங்களது விவசாய நிலங்களுக்கும் தங்களுக்கும் உரிய பாதுகாப்பு இல்லை என்றும் தொடர்ந்து யானைகள் தங்களை அச்சுறுத்தி வருவதாகவும் தெரவித்தனர். மேலும் வனப்பகுதியில் உள்ள அகழிகளை ஆழப்படுத்த வேண்டும் என்றும் பென்சிங் அமைத்து விவசாய பகுதியில் யானைகள் புகுவதை வனத்துறையினர் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News