ஊரடங்கு விதிமீறல்: ஈரோட்டில் ஒரேநாளில் ரூ.4.75 லட்சம் அபராதம் வசூல்!

ஈரோட்டில், முழு ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய வாகன ஓட்டிகளிடம் இருந்து ஒரேநாளில் ரூ.4.75 லட்சம் வசூலிக்கப்பட்டது.

Update: 2021-06-04 12:04 GMT

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்து, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை தெரிவித்திருந்தார்.

மேலும், ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட எல்லையில் உள்ள 13 நிலையான சோதனைச்சாவடிகளிலும், 42 தற்காலிக சோதனைச் வடிகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். எல்லைப்பகுதிகள் சீல் வைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும் முழு ஊரடங்கை பொருட்படுத்தாமல் வழக்கம் போல், இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் ஏராளமானோர் சுற்றி திரிகின்றனர். போலீசார் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுத்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் இன்னும் சில வாகன ஓட்டிகள் வெளியே சர்வசாதாரணமாக சுற்றி வருகின்றனர்.

போலீசாரின் நடவடிக்கயில், மாவட்டம் முழுவதும், முகக்கவசம் அணியாமல் வந்த 375 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 23 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தடையை மீறி சுற்றியதாக 875 வழக்குகளும்; 850 இருசக்கர வாகனங்களும், 25 நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவ்வகையில், ஒரே நாளில் ரூ.4.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News