அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.8.65 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை பருத்தி ஏலம் நடைபெறும்.;

Update: 2021-11-02 11:15 GMT

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று மாலை நடந்த ஏலத்தில் விவசாயிகள் பருத்தி 431 மூட்டைகள் கொண்டு வந்திருந்தனர்.

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்பனைக்காக கொண்டு வருவர்கள் வாரந்தோறும் திங்கள் கிழமை பருத்தி ஏலம் நடைபெறும்.

நேற்று மாலை நடந்த ஏலத்தில் விவசாயிகள்பருத்தி 431 மூட்டைகள் கொண்டு வந்திருந்தனர். பருத்தி கிலோ ஒன்றுக்கு 72.69 குறைந்தபட்சமாக விற்பனை செய்யப்பட்டது. அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு 80.86 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது மொத்தம் 8 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கு பருத்தி நேற்று விற்பனை செய்யப்பட்டது.

Tags:    

Similar News