அந்தியூர் தொகுதிக்குட்பட்ட இரண்டு ஊராட்சிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் துவக்கம்
அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இரண்டு ஊராட்சிகளில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகளை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் வளர்ச்சி திட்ட பணிகளை குறித்து நாள்தோறும் ஆய்வு நடத்தி வருகிறார். மேலும் தொகுதி மக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்து வருகிறார். இதனைத்தொடர்ந்து சின்னதம்பிபாளையம் மற்றும் வேம்பத்தி ஊராட்சிக்குட்பட்ட 6 இடங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சிமெண்ட் கான்கிரீட் தளத்தை அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை செய்து ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவசங்கர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.