அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் திருக்கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.;
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.ஐப்பசி மாத அமாவாசை தினமும், தீபாவளி பண்டிகையுமான இன்று, பத்ரகாளியம்மன் கோவிலில் அந்தியூர் சுற்று வட்டாரத்தில் உள்ள பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், பள்ளிகள் விடுமுறை என்பதால் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து, சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பத்ரகாளியம்மனை வழிபட்டுச் சென்றனர்.