திமுக ஆட்சியினை யாராலும் அசைக்க முடியாது; அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம்

அந்தியூர் ஒன்றியம் திமுக செயற்குழு ஆலோசனை கூட்டத்தில் திமுக ஆட்சியினை யாராலும் அசைக்க முடியாது என அந்தியூர் எம்எல்ஏ கூறினார்.;

Update: 2022-01-02 08:45 GMT

ஈரோடு வடக்கு மாவட்டம் அந்தியூர் ஒன்றிய திமுக சார்பில், செயற்குழு ஆலோசனை கூட்டம் அந்தியூர்- அத்தாணி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடந்தது. 


முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் எம்எல்ஏ ,  மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் , ஒன்றிய அவைத்தலைவர் காளிமுத்து கலந்து கொண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து, கிருஷ்ணகிரி நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் செல்லகுமார் எம்பிக்கு சால்வை அணிவித்தனர். 


இந்நிகழ்ச்சியில், பேசிய ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ, தமிழக அரசின் திட்டங்கள் மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என அயராது உழைத்து கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியினை,  தமிழகத்தில் யாராலும் அசைக்க முடியாது. திமுக அரசின் திட்டங்கள் குறித்தும் பேசினார். பின்னர், அடுத்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தந்து நலத்திட்ட உதவிகளை வழங்க இருக்கிறார். 


பர்கூர் மலைப்பகுதியில் சாலை வசதியினை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து பகுதிகளிலும் திமுக உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர் என்ற நிலையினை ஏற்படுத்த வேண்டும். அந்தியூர் தொகுதியில் உள்ள 5 பேரூராட்சியான அந்தியூர், அத்தாணி, வாணிப்புத்தூர், கூகலூர், மேட்டுப்பாளையம் ஆகிய பேரூராட்சி தேர்தலில் திமுகவினை  வெற்றியடைய செய்ய வேண்டும் என கூறினார்.

இக்கூட்டத்தில் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News