தம்பிக்கலை அய்யன் கோவில்ஆண்டு திருவிழா தொடங்கியது..
Thambi Kalai Ayyan Kovil-அந்தியூர் அருகே உள்ள பொதியாமூப்பனூர் தம்பிக்கலை அய்யன் கோவிலில் ஆண்டு திருவிழா தொடங்கியது.
Thambi Kalai Ayyan Kovil-ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பொதியாமூப்பனூர் தம்பிக்கலை அய்யன் கோவில் இராகு கேது பரிகார ஸ்தலமாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாத முதல் வாரத்தில் தேர்த்திருவிழா, கஞ்சி வழிபாடு சிறப்பான முறையில் நடக்கும்.
அதன்படி, இந்தாண்டுக்கான தேர்த்திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. வரும் 16ம் தேதி இரவு கொடியேற்றம் நடைபெறும். 23ம் தேதி தேர் அலங்கார பூஜை நடக்கிறது.
தொடர்ந்து, 24ம் தேதி முக்கிய நிகழ்ச்சியான கஞ்சி வழிபாடு மற்றும் தேர்த்திருவிழா நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
இதனையடுத்து, 25ம் தேதி வாண வேடிக்கை, 31-ம் தேதி வன மறு பூஜை, செப்டம்பர் மாதம் 7ல் பால் பூஜை ஆகியவை நடைபெற்றபின் செப். 13ல் லோக பூஜையுடன் திருவிழா நிறைவடையும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2