தேர்தலை முன்னிட்டு அந்தியூர் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு
நகர்ப்புற தேர்தலை முன்னிட்டு அந்தியூர் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது
.ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சிக்கு வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் நகர்ப்புற தேர்தலை முன்னிட்டு, அந்தியூர் காவல்துறை சார்பில் பவானி டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில், கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.
இன்று மாலை அந்தியூர் பவானி சாலையில் உள்ள மங்கலம் பள்ளி அருகில் இருந்து துவங்கிய பேரணி, அந்தியூர் பஸ் நிலையம், பிரம்மதேசம் பிரிவு, தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்று அந்தியூர் காவல் நிலையத்தில் நிறைவு பெற்றது.
தேர்தலில் தைரியமாகவும், நேர்மையாகவும், 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இப்பேரணி நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்.