அந்தியூரில் கோழி எலும்பு தொண்டையில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு
கூச்சிக்கல்லூரில் கோழி குழம்பில் இருந்த எலும்பு தொண்டையில் சிக்கி கட்டிட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கூச்சிக்கல்லூரை சேர்ந்தவர் சுப்பிரமணியம் வயது 56. கட்டிட தொழிலாளியான இவர், இன்று மதியம் அதே பகுதியைச் சேர்ந்த முனிராஜ் என்பவரது வீட்டில், கோழிக்கறி குழம்புடன் சாப்பிட்டார். அப்போது திடீரென தொண்டையில் எலும்பு சிக்கி, மூச்சு விட முடியாமல் திணறி உள்ளார்.
உடனடியாக அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, பரிசோதனை செய்த மருத்துவர்கள், சுப்பிரமணியன் இறந்து விட்டதாக கூறினர். தகவலறிந்த அந்தியூர் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.