அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் இன்றுமுதல் பக்தர்களுக்கு அனுமதி

அரசு அனுமதியளிக்கப்பட்டதால் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் இன்று சுவாமி தரிசனம் செய்ய ஏராளமானோர் கூடினர்.

Update: 2021-10-15 11:30 GMT

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில், இன்று சுவாமி தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 

தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக, பாதுகாப்பு நடவடிக்கை கருதி, அனைத்து திருத்தலங்களிலும் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய வாரத்தின் மூன்று நாட்களில், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அரசு தடை விதித்தது. கொரோனா தொற்று படிப்படியாக குறைந்ததால், கோவிலைத் திறக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, இது சம்பந்தமாக தமிழ்நாடு அரசு சார்பில் நேற்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய தினங்களில் கோவில் திறக்கலாம் எனவும் பக்தர்களுக்கு அனுமதியளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில், இன்று சுவாமி தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக வெப்பநிலை சரிபார்க்கப்பட்டு முகக்கவசம் அணிந்தவர்கள் மட்டும் சமூக இடைவெளியுடன் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News