பர்கூர் பகுதியில் ஆதார் சிறப்பு முகாம்

ஈரோடு மாவட்டத்தில் ஆதார் சிறப்பு முகாம் 3 நாட்கள் நடைபெறுகிறது.

Update: 2021-10-12 05:00 GMT

ஈரோடு மாவட்ட மக்கள் அனைவரும் ஆதார் சேவையை எளிதில் பெறும் வகையில் ஈரோடு அஞ்சல் ஆதார் கோட்டம் சார்பில் பல்வேறு  இடங்களில் ஆதார் சிறப்பு சேவை முகாமை நடத்தி வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் அக்டோபர் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை மாவட்டத்தில் 4 இடங்களில் ஆதார் சிறப்பு முகாம்  நடைபெறுவதாக அறிவித்தது. அதன்படி பர்கூர் அருகே உள்ள தாமரைகரை அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆதார் சிறப்பு முகாமை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் துவக்கி வைத்து பார்வையிட்டார். 

Tags:    

Similar News