அந்தியூர் சங்கராபாளையத்தில் 71.59 சதவீதம் வாக்குப்பதிவு

அந்தியூர் சங்கராபாளையத்தில் இன்று நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் 71.59 சதவீதம் வாக்குப்பதிவு செய்யப்பட்டது.;

Update: 2021-10-09 14:00 GMT

வாக்கு செலுத்த ஆர்வமுடன் வரிசையில் காத்திருந்த பொதுமக்கள். 

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், சங்கராப்பாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கு இடைத் தேர்தல் இன்று நடந்தது. இதில் சங்கராப்பாளையம், வட்டக்காடு உள்ளிட்ட மொத்தமுள்ள ஐந்து வாக்குசாவடிகளில், 6 மணியுடன் முடிந்த வாக்குப்பதிவில், 71.59 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார்.

Tags:    

Similar News