அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் உண்டியலில் ரூ.11 லட்சத்து 28 ஆயிரம் காணிக்கை
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியல் இன்று காலை திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் பவானி சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் சபர்மதி முன்னிலையில், அந்தியூர் பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் துர்க்கை வழிபாட்டு குழுவினர், உண்டியலில் இருந்த நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்களை பிரித்து தனித்தனியாக கணக்கிட்டனர். இதில் 11 லட்சத்து 28 ஆயிரத்து 901 ரூபாய் பணம், பொதுமக்களால் உண்டியல் மூலம் பெறப்பட்டது. மேலும், 148 கிராம் பொன்னும், 451 கிராம் வெள்ளியும் உண்டியலில் இருந்தது. இதையடுத்து, உண்டியலில் இருந்து பெறப்பட்ட அனைத்தும் பத்ரகாளியம்மன் கோவில் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.