அந்தியூர்: வேம்பத்தி ஓசைப்பட்டியில் குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் மனு

அந்தியூர் அடுத்த வேம்பத்தி ஊராட்சிக்குட்பட்ட ஓசைப்பட்டியில் குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனுவை அளித்தனர்.

Update: 2022-05-11 09:45 GMT

வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணனிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனுவை அளித்த போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வேம்பத்தி ஊராட்சிக்குட்பட்ட ஓசைப்பட்டியில் 800-க்கும் மேற்பட்ட, குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இன்று, அக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு முறையாக குடிநீர் வழங்குமாறு, அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவில் கூறியிருப்பதாவது:  ஓசைப்பட்டி கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம், குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், அந்த தண்ணீர் போதுமானதாக இல்லை. மேலும், ஆற்று குடிநீர் மாதத்திற்கு இருமுறை வழங்கப்படுகிறது. அதுவும் அரைமணி நேரம் கூட வருவதில்லை.

இதனால், குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம், புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News