அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம்

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் தேரோட்டத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.;

Update: 2022-04-08 14:15 GMT

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் பங்குனி குண்டம் திருவிழா கடந்த 17ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது.தொடர்ந்து, இருபத்தொரு நாட்கள் பத்ரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.கடந்த புதன்கிழமை நடைபெற்ற குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பூக்குழி இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர்.இதைத்தொடர்ந்து பண்டிகையின் இறுதி நிகழ்வான தேரோட்டம் இன்று மாலை நடைபெற்றது.

அந்தியூர் வட்டாட்சியர் விஜயகுமார், அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்து அழைத்து வரப்பட்டனர்.முன்னதாக தேர் வீதியில் தேரில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கோவில் முகமைதாரர்கள் உள்ளிட்ட பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.இன்று முதல் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு முக்கிய வீதிகள் வழியே செல்லும் தேர், வரும் 11ம் தேதி தேர் வீதியில் நிலை நிறுத்தப்படும்.இந்த நிகழ்வில் பேரூராட்சித் தலைவர் பாண்டியம்மாள், கவுன்சிலர்கள் பழனிச்சாமி செந்தில், பத்ரகாளியம்மன் கோவில் செயல் அலுவலர் சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News