ஈரோடு இடைத்தேர்தல்: ஓபிஎஸ் அணி வேட்பாளராக செந்தில் முருகன் அறிவிப்பு

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பில் செந்தில்முருகன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-02-01 11:00 GMT

ஓபிஎஸ் அணி வேட்பாளர் செந்தில்முருகன்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பில் செந்தில்முருகன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் திமுக கூட்டணியில், காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் தென்னரசு, தேமுதிக தனித்து போட்டியிடுவதாக அறிவித்து மாநகர் மாவட்ட செயலர் ஆனந்த் என்பவரை வேட்பாளராக நிறுத்தி உள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், அமமுக சார்பில் சிவ பிரசாத் போட்டியிடுகின்றனர். இதனால், நாளுக்கு நாள் இடைத்தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பு அடைந்து வருகிறது

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈபிஎஸ் அணி தரப்பில் சார்பாக தென்னரசு போட்டியிடுவார் என்று எடப்பாடி பழனிசாமி இன்று காலை அறிவித்திருந்த்த நிலையில், தற்போது ஓபிஎஸ் அணி சார்பாக செந்தில் முருகன் போட்டியிடுவார் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

செந்தில் முருகனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும், பாஜக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டால் எங்களது வேட்பாளரை வாபஸ் பெறுவோம் எனவும் கூறியுள்ளார். மேலும், இந்திய தேர்தல் ஆணைய ஆணவப்படி, இன்று வரை அதிமுக ஒருங்கிணைப்பாளராக நான் இருக்கிறேன் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தற்போது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் இரண்டு வேட்பாளர்கள் அறிவித்துள்ளதால் தொண்டர்கள் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் வேட்பாளர்களில் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

Tags:    

Similar News