அந்தியூரில் நாளை ஈரோடு-சேலம் மாவட்ட விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம்

ஈரோடு மற்றும் சேலம் மாவட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம் அந்தியூரில் நாளை (24ம் தேதி) நடக்கிறது.

Update: 2024-09-23 12:00 GMT

விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம் குறித்த அறிவிப்பு.

ஈரோடு மற்றும் சேலம் மாவட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம் அந்தியூரில் நாளை (24ம் தேதி)  திருப்பூர் தொகுதி எம்பி சுப்பராயன் தலைமையில் நடக்கிறது.

இதுகுறித்து அந்தியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் கூறியதாவது, 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பர்கூர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நாளை (24ம் தேதி) செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு ஈரோடு மாவட்ட பகுதிகளான அந்தியூர்,அம்மாபேட்டை, பவானி மற்றும் சேலம் மாவட்ட பகுதிகளான கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளது. 

இந்தக் கூட்டத்தில், ஈரோடு - சேலம் மாவட்டங்களில் இருக்கும் ஏரி, குளம், குட்டைகளை நிரப்பி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த மேட்டூர் அணை உபரி நீர் திட்டத்தையும், பர்கூர் மலைப்பகுதியில் இருந்து வரும் காட்டாற்று வெள்ளத்தை தோனிமடுவு திட்டத்தையும் இணைத்து செயல்படுத்தும் திட்டம், பவானிசாகர் அணையில் இருந்து வரும் உபரி நீரை அந்தியூர், அம்மாபேட்டை,பவானி பகுதிகளுக்கு கொண்டுவரும் திட்டம், டி.என்.பாளையம் மலைப்பகுதியில் இருந்து வரும் காட்டாற்று வெள்ள நீர் வீணாக ஆற்றில் கலப்பதை தடுத்து தடுப்பணை கட்டிடும் வேதபாறை அணை திட்டம் வேண்டி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த மூன்று திட்டங்களையும் நிறைவேற்றிட கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாடு முதலமைச்சர், நீர்வளத்துறை அமைச்சர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் மற்றும் நீர்வளத்துறை உயர் அதிகாரிகள் ஆகியோர்களின் உத்தரவின் படி எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தெரிவித்தல் மற்றும் இதற்கு மேல் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்தாய்வு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட உள்ளது.

கூட்டத்திற்கு, திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் தலைமை வகிக்கிறார். எனவே, கூட்டத்தில் திமுக தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் விவசாய சங்கங்கள் மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் ஆகியோர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் அவர்.

Tags:    

Similar News