மலைக்கிராம பேருந்தில் பயணித்து சாலையை ஆய்வு செய்த அந்தியூர் எம்எல்ஏ
மலைக்கிராமத்திற்கு சரியான நேரத்தில் பேருந்து இயக்கப்படுவதில்லை என மக்கள் தெரிவித்த புகாரின்பேரில், பேருந்தில் பயணித்து சாலை மேம்பாட்டு பணிகளை அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் ஆய்வு செய்தார்.
மலைக்கிராமத்திற்கு சரியான நேரத்தில் பேருந்து இயக்கப்படுவதில்லை என மக்கள் தெரிவித்த புகாரின்பேரில், பேருந்தில் பயணித்து சாலை மேம்பாட்டு பணிகளை அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் ஆய்வு செய்தார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் பர்கூர் மலைக்கிராமத்தில் கிழக்கு மலைப்பகுதியான தாமரைக்கரை முதல் மடம் வரையிலான சாலையில் தாமரைக்கரை முதல் தேவர்மலை வரை சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது, மழைக்காலம் என்பதால் பள்ளி செல்லும் மாணவ - மாணவிகள், அத்தியாவசிய தேவைகளுக்கும், அவசரகால தேவைகளுக்கும், சென்றிட சரியான கால நேரத்திற்கு பேருந்து இயக்கப்படுவதில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், சம்மந்தப்பட்ட போக்குவரத்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் பேருந்தில் பயணம் செய்தபடி, தாமரைக்கரை முதல் மடம் வரையிலான சாலையில் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டு பணிகளை அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், பேருந்து செல்லும் வழித்தடத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது , தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அந்தியூர் கிளை மேலாளர் ரமேஷ் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.