அந்தியூர்: பறவைகளை கன்னி வைத்து பிடிக்க முயன்ற நபருக்கு அபராதம்
அந்தியூரில் காடை, கவுதாரி பறவைகளை கன்னி வைத்து பிடிக்க முயன்றவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட, பர்கூர், காப்புக்காடு, மூலப்பாறை பகுதியில் பறவைகள் வேட்டையாடுவதைத் தடுக்கும் வகையில் அந்தியூர் வனச்சரக வனக்காப்பாளர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.அப்போது, வனப்பகுதியில், நகலூர் அருகே உள்ள ஈசப்பாறை பெருமாள் கோவில் தோட்டத்தை சேர்ந்த பழனிச்சாமி (வயது70) என்பவர் காடை , கவுதாரி போன்ற பறவைகளை பிடிக்கப்பதற்காக கன்னி வைத்து கொண்டிருந்த போது கையும் களவுமாக பிடித்து, அவரிடம் இருந்து கன்னிகளை பறிமுதல் செய்தனர். அதனைத்தொடர்ந்து, ஈரோடு மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் பழனிச்சாமி மீது வழக்குப் பதிந்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.