அந்தியூர் - பர்கூர் சாலை சீரமைப்பு பணி கண்காணிப்புப் பொறியாளர் ஆய்வு
Erode News- ஈரோடு மாவட்டம் அந்தியூர் - பர்கூர் மலைப்பாதையில் சாலை சீரமைப்பு பணி திருப்பூர் கண்காணிப்புப் பொறியாளர் சரவணன் ஆய்வு மேற்கொண்டார்.
Erode News, Erode News Today- அந்தியூர் - பர்கூர் மலைப்பாதையில் சாலை சீரமைப்பு பணி திருப்பூர் கண்காணிப்புப் பொறியாளர் சரவணன் ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து பர்கூர் செல்லும் மலைப்பாதை சாலை கடந்த வாரத்தில் பெய்த கனமழையால் சேதமடைந்தது. இதனையடுத்து, சாலையை சீரமைக்கும் பணிகள் நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், சாலையில் மழையினால் ஏற்பட்ட பள்ளங்களில் கான்கீரிட் கவலைகள் கொண்டு நிரப்பியும், மழையினால் சேதமடைந்த மண் சரிவுகளில் மணல் மூட்டைகள் அடிக்கியும், மலையில் இருந்து சரிந்துள்ள பாறை மற்றும் மண் குவியல்களை பொக்லைன் மற்றும் டிப்பர் ஆகிய வாகனங்களை கொண்டு அகற்றியும், சிறுபாலங்களில் உள்ள நீர்வழித் தடங்கள் மற்றும் மழைநீர் வடிகால் சுத்தப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், பொதுமக்களின் தடையற்ற போக்குவரத்திற்கு உரிய நடவடிக்கைகளை நெடுஞ்சாலைத்துறையினர் செய்து வரும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் உத்தரவின்படி, தலைமைப் பொறியாளர் அறிவுரையின்படி, திருப்பூர் கண்காணிப்புப் பொறியாளர் சரவணன் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.