டி.என்.பாளையம் வனச்சரகத்தில் நாளை யானைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் வனச்சரத்தில் நாளை ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்புப் பணி தொடங்குகிறது.

Update: 2024-05-22 15:20 GMT

யானைகள் (கோப்புப் படம்).

கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் வனச்சரத்தில் நாளை ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்புப் பணி தொடங்குகிறது.

மிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேச மாநில வனப்பகுதிகளில் நடப்பு ஆண்டுக்கான ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி நாளை (மே.23) வியாழக்கிழமை தொடங்கி, தொடர்ந்து மூன்று நாட்கள் நடக்கிறது.

அதன்படி, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தூக்கநாயக்கன்பாளையம் (டி.என்.பாளையம்) வனச்சரகத்திற்கு உட்பட்ட ஏழு காவல் சுற்றுகளிலும் நாளை முதல் தொடங்கி, தொடர்ந்து மூன்று நாட்கள் வரை ஒருங்கிணைக்கப்பட்ட யானைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.

இதுகுறித்து, டி.என்.பாளையம் வனத்துறையினர் கூறுகையில், யானைகள் கணக்கெடுப்பு மூன்று விதமாக, மூன்று நாட்களில் மேற்கொள்ளப்பட உள்ளன. முதல் நாள் யானையை நேரடியாகப் பார்த்து அதன் பாலினம் மற்றும் பெரிய யானை, சிறிய யானை, குட்டி மற்றும் மக்னா என வகைப்படுத்தி கணக்கெடுப்பு செய்யப்படவுள்ளது. இப்பணியானது, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.

இரண்டாம் நாள் நேர் கோட்டு பாதையில தென்படும் யானை சாணங்களை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கணக்கீடு செய்யப்படவுள்ளது. மூன்றாம் நாள் நீர் நிலைகளுக்கு வரும் யானைகள் அதன் பாலினம் மற்றும் பெரிய யானை, சிறிய யானை, குட்டி மற்றும் மக்னா என வகைப்படுத்தி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கணக்கெடுப்பு செய்யப்படும் என்றனர்.

Tags:    

Similar News