ஈரோட்டில் ஆயில் நிறுவனத்தில் ரூ.1.74 லட்சம் கையாடல் செய்த ஊழியர் கைது

ஈரோட்டில் ஆயில் நிறுவனத்தில் ரூ.1.74 லட்சம் கையாடல் செய்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-07-26 00:45 GMT

கையாடல் செய்த ஊழியர் கைது (பைல் படம்).

ஈரோட்டில் ஆயில் நிறுவனத்தில் ரூ.1.74 லட்சம் கையாடல் செய்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு திண்டல் யுஆர்சி நகரைச் சேர்ந்தவர் சதாசிவம் (வயது 53). இவர், அதே பகுதியில் மோட்டார் வாகன ஆயில் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். பல்வேறு பகுதி வியாபாரிகளிடம் ஆர்டர் பெற்று ஆயில் வழங்கி, அதற்கான தொகையை மாதந்தோறும் தவணை முறையில் பெற்று வந்தார்.

இந்த நிறுவனத்தில் ஈரோடு தண்ணீர்பந்தல்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியைச்ய சேர்ந்த சந்திரசேகரன் மகன் தீபக் என்பவர் விற்பனை மற்றும் பணம் வசூல் செய்யும் ஊழியராக பணியாற்றி வந்தார்.

தீபக் வாடிக்கையாளர்களிடம் வசூலித்து நிறுவனத்துக்கு கொடுத்த கணக்கில் வித்தியாசம் இருந்ததால், நிறுவனத்தினர் வசூல் கணக்கினை ஆய்வு செய்தனர். அதில், வாடிக்கையாளர்களிடம் பெற்ற ரூ.1.74 லட்சம் ரூபாயை நிறுவனத்தின் வங்கி கணக்குக்கு செலுத்தாமல் கையாடல் செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீபக்கை கைது செய்தனர்.

Tags:    

Similar News