கடம்பூர் அருகே பள்ளத்தில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய யானை உயிரிழப்பு
கடம்பூர் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பெண் யானை ஒன்று பள்ளத்தில் தவறி விழுந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
கடம்பூர் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பெண் யானை ஒன்று பள்ளத்தில் தவறி விழுந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கடம்பூர் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்நிலையில் இப்பகுதியில் உள்ள குரும்பூர் மொசல்மடுவு கிராமத்திற்கு அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பெண் யானை ஒன்று சாலையோரம் இருந்த பள்ளத்தில் விழுந்து கிடந்தது.
இதனையடுத்து அருகே உள்ள கிராம மக்கள் பள்ளத்தில் விழுந்து கிடந்த யானை குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மருத்துவர்களின் உதவியுடன் பள்ளத்தில் விழுந்து கிடந்த யானையை மீட்டு சிகிச்சை அளித்தனர். அதனைத்தொடர்ந்து சோர்வாக படுத்திருந்த யானைக்கு மருத்துவர்கள் தொடர்ந்து அளித்த சிகிச்சையில் பலனின்றி நேற்று மாலை யானை உயிரிழந்தது.
இறந்த பெண் யானைக்கு 25 முதல் 30 வயது இருக்கும் என்றும் வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக தண்ணீரை தேடு வனப்பகுதியை விட்டு தேடி வெளியேறிய யானை வயது முதிர்வு காரணமாக நடக்க முடியாமல் பள்ளத்தில் தவறி விழுந்துள்ளதாக வனத்துறையினர் நடத்திய விசாரணையில் தெரிய வருகிறது.