ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் உடல் உறுப்பு தான கருத்தரங்கு
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று (21ம் தேதி) நடைபெற்றது.
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் கணினி பயன்பாட்டுத் துறை மற்றும் ஈரோடு கேஎம்சிஎச் மருத்துவமனை இணைந்து உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை இன்றைய இளைய தலைமுறைக்கு ஏற்படுத்தும் விதமாக லைப் ஆப்டர் லைப் என்ற தலைப்பில் கருத்தரங்கை நடத்தியது.
இந்தக் கருத்தரங்கில், சிறப்பு விருந்தினராக சிறுநீரகம் மற்றும் மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரபு முருகேசன் கலந்து கொண்டு மாணவர்களிடையே உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேசினார்.
இதில், இன்றைய சூழலில் நடைபெறும் விபத்துகளால் மூளைச்சாவு அடைபவர்களின் உடல் உறுப்பு தானம் செய்வதன் மூலம் மற்றொருவர் வாழ்வை காக்கின்றனர் என்பதையும், மாணவ-மாணவிகளுக்கு உடல் உறுப்பு தானம், அதன் அவசியம் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து மாணவ-மாணவிகள் உடல் உறுப்பு தானம் செய்வதாக கையொப்ப பலகையில் கையொப்பமிட்டனர். இதனை, கல்லூரியின் தாளாளர் பி.டி.தங்கவேல், முதல்வர் ஹெச்.வாசுதேவன் ஆகியோர் இணைந்து பாராட்டினர்.