ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் போட்டியிடும். ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கை சின்னம், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்துள்ளார்.
வரும் 27-ம் தேதி ஈரோடு கிழக்கு தொகு திக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் அதற்கான சின்னங்களும் ஒதுக்கப்பட்டு வருகின்றன. இதில் அ.தி.மு.க. வேட்பாளரான கே.எஸ். தென்னரசுவிற்கு இரட்டை இலை சின்னம் வழங்கப் பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலரான சிவகுமார் அறிவித்துள்ளார்.
இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கை சின்னமும், தேமுதிக வேட்பாளரான ஆனந்ததுக்கு முரசு சின்னமும், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா களத்தில் உள்ளார். இவருக்கு கரும்பு விவசாயி சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் குக்கர் சின்னம் ஒதுக்கப்படாததால் அமமுக சார்பில் நிறுத்தப்பட்டிருந்த வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை திரும்ப பெற்ற நிலையில், குக்கர் சின்னமும் சுயேட்சைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து தற்போது சுயேச்சை வேட்பாளர்களாக நிற்பவர்களுக்கு அவர்கள் கேட்கப்பட்டுள்ள சின்னங்களின் பட்டியலில் இருந்து அவர்கள் தேர்ந்தெடுத்திருந்த சின்னங்கள் ஒவ்வொன்றாக ஒதுக்கப்பட்டுள்ளன.