ஈரோடு மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (அக்.26) முழு வேலை நாளாக அறிவிப்பு
Erode news- ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (அக்.26) சனிக்கிழமை முழு வேலை நாளாக இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Erode news, Erode news today- ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (அக்.26) சனிக்கிழமை முழு வேலை நாளாக இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மழையின் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கு கடந்த (22ம் தேதி) செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அன்றைய நாளை ஈடுசெய்யும் வகையில் நாளை (26ம் தேதி) சனிக்கிழமை ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை பள்ளிகளும் செவ்வாய்க்கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்பட வேண்டும் என்று ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு, நகரவை, நிதியுதவி, தனியார் தொடக்க, நடுநிலை, உயர், மேல்நிலைப் பள்ளிகளுக்கு மழையின் காரணமாக 22.10.2024 அன்று மாவட்ட ஆட்சியரால் விடுமுறை அளிக்கப்பட்ட நாளை ஈடு செய்யும் வகையில் 26.10.2024 சனிக்கிழமை அன்று அனைத்து வகை பள்ளிகளுக்கும் முழு வேலை நாள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.