திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வரலாறு படைக்கும்: செங்கோட்டையன் உறுதி
Erode news- திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் வரலாறு படைக்கின்ற அளவிற்கு அதிமுக வெற்றி வாகை சூடும் என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.;
Erode news- செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ.
Erode news, Erode news today- திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் வரலாறு படைக்கின்ற அளவிற்கு அதிமுக வெற்றி வாகை சூடும் என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக பெருந்துறையைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அருணாச்சலம் கோபிசெட்டிபாளையம் அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அவரது இல்லத்தில் தொண்டர்களுடன் சந்தித்தார். அவருக்கு முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சால்வை அணிவித்து தொண்டர்களிடையே அறிமுகப்படுத்தி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கே.ஏ.செங்கோட்டையன், முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வழியில் அதிமுக 1977லிருந்து 8 முறை ஆட்சியில் இருந்து சிறந்த ஆட்சியை தமிழகத்தில் தந்துள்ளது. தற்போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து வருகிறோம். கோபி தொகுதியை பொறுத்தவரை பல்வேறு தேர்தலில் அதிமுக கோட்டையாக திகழ்ந்துள்ளது. திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் வரலாறு படைக்கின்ற அளவிற்கு அதிமுக வெற்றி வாகை சூடும்.
திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி என்பது தமிழகத்தில் மாபெரும் வெற்றியை ஈட்டி தருகிற நாடாளுமன்றத் தொகுதியாக உருவாக்குவதற்கு அனைவரும் அயராது உழைக்க வேண்டும். இதற்காக அனைத்து முன்னோடி பொறுப்பாளர்களும், இயக்கத்திற்கு அரணாக இருந்து வெற்றி என்ற இலக்கை நோக்கி பயணங்களை மேற்கொள்வோம். அதிமுக கூட்டணி கட்சியை சார்ந்தவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியின் வாக்கு வித்தியாசம் தமிழகத்தின் முதல் இடத்தை பெற்று இருக்கிறது என்ற வரலாற்றை படைப்போம் என்றார்.
இந்த பேட்டியின்போது, சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், முன்னாள் எம்எல்ஏ எஸ்.எஸ்.ரமணிதரன், கோபி முன்னாள் நகர மன்ற தலைவரும் மாவட்ட பொருளாளருமான கே.கே.கந்தவேல் முருகன், பெருந்துறை தொகுதி அண்ணா திமுக ஒன்றிய செயலாளர் வைகை தம்பி (எ) ரஞ்சித் ராஜ், அருள் ஜோதி செல்வராஜ், விஜயன் (எ) ராமசாமி, கோபி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மவுலீஸ்வரன், கோபி தொகுதி ஒன்றியச் செயலாளர்கள் குறிஞ்சிநாதன், வக்கீல் வேலுமணி, தம்பி (எ) சுப்ரமணியன், கோபி நகர செயலாளர் பிரிணியோ கணேஷ், பெருந்துறை பேரூர் செயலாளர் கல்யாணசுந்தரம், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட பொருளாளர் கே.பி.எஸ்.மணி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் அப்புக்குட்டி ஆகியோர் உடன் இருந்தனர்.