விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக் கோரி ஈரோட்டில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, நூல் விலை உயர்வு உள்ளிட்டவைகளை உயர்த்திய திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்.என்.புதூர் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, நூல் விலை உயர்வு உள்ளிட்டவைகளை உயர்த்திய திமுக அரசை கண் டித்து அதிமுக ஈரோடு மாநகர் மாவட்ட கழகத்தின் சார் பில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் தலைமையில் ஈரோடு மாநகராட்சி 1வது மண்டல அலுவலகம் உள்ள பகுதியான ஆர்.என்.புதூர் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர்.பி.சி.ராமசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.எஸ்.தென்னரசு, சிவசுப்பிரமணிய, முன்னாள் துணை மேயர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் வீரகுமார், பகுதி கழக செயலாளர் மனோகரன், கேசமூர்த்தி ஜெகதீஷ், கங்காபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் பொங்கி உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
அதனை தொடர்ந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.வி. ராமலிங்கம் பேசுகையில், கடந்த அதிமுக ஆட்சியில் அன்றைய எதிர்க்கட்சியாக இருந்த ஸ்டாலின் பல்வேறு போராட்டங்களை நடத்தினார். தமிழகத்தில் ஒரு குடும்பமே பொய்யை சொல்லி ஆட்சிக்கு வந்து உள்ளது. சொத்துவரி, மின்கட்டண உயர்வு செய்து இன்றைக்கு இந்த அரசு மக்களை வாட்டி வதைக்கிறது. முதியோர்களுக்கு ஓய்வூதிய வழங்கு வதை இந்த அரசு குறைத்து விட்டது. பால்வளத்துறையில் இன்றைக்கு பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகிறது. குறிப்பாக பால் விலையை உயர்த்தி உள்ளது. ஆனால் அந்த அமைச்சரின் இல்லத்திற்கு சென்று பால் வளத்துறை சிறப்பாக செயல்படுவதாக முதல்வர் கூறுகிறார்.
கடந்த ஆட்சியில் பொங்கல் சிறப்பு தொகை மட்டுமில்லாமல் அரிசி, சர்க்கரை, மஞ்சள், கரும்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கியது அதிமுக அரசு. ஆனால் இன்றைக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்குவதே பிரச்சினையாக உள்ளது. மக்களை பற்றி கவலைப்படாமால் தனது மகனுக்கு முடிசூடும் விழா நடத்தி உள்ளார் முதல்வர். இந்த விடியா அரசு விவசாயிகள் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு மக்களையும் வாட்டிவதைப்பதாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர் இந்த அரசுக்கு முடிவு கட்டும் வகையில் வருகிற தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் அதிமுகவிற்கு வாக்களித்து பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.