கோபிசெட்டிபாளையம் அருகே நிலமோசடியில் ஈடுபட்ட அதிமுக அவைத்தலைவர் கைது

கோபிசெட்டிபாளையம் அருகே நஞ்சகவுண்டன்பாளையத்தை சேர்ந்த விவசாயிடம் நிலமோசடியில் ஈடுபட்டதாக அத்தாணி பேரூர் கழக அதிமுக அவைத்தலைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-18 09:45 GMT

கைது செய்யப்பட்ட சடையப்பன்.

ஈரோடு மாவட்டம், கோபி பா.நஞ்சகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 59). விவசாயி. இவர் அத்தாணி பேரூர் அதிமுக அவைத்தலைவராக உள்ள சடையப்பன் என்பவரிடம் ரூ.1 கோடியே 21 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதற்கு ஈடாக ராமநாதன் தன்னிடம் உள்ள 2 ஏக்கர் 10 சென்ட் இடத்தை சடையப்பனிடம் கொடுத்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் அந்த 2 ஏக்கர் 2 சென்ட் இடத்தை வேறு ஒருவருடன் சேர்ந்து டி. டி.சி.பி. அங்கீகாரம் பெற்று ரூ.5 கோடியே 50 லட்சத்துக்கு விற்றதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சடையப்பனிடம் கேட்டபோது வாங்கிய ராமநாதன் கடனாக ரூ.1 கோடியே 21லட்சத்துக்கு வட்டி மற்றும் இதர செலவுகளுக்கு சரியாகி விட்டதாக சடையப்பன் கூறி உள்ளார். இதனால் ராமநா தன் ஏமாற்றம் அடைந்தார்.

மேலும் அத்தாணியில் உள்ள ராமநாதனின் சகோதரியின் ஏக்கர் 4 நிலத்தை அந்த பகுதியை சேர்ந்த ஒருவரிடம் அடமானம் வைத்து ஒரு பெரும் தொகையை ராமநாதன் பெற்றதாகவும், அந்த தொகையை திருப்பிசெலுத்த முடியாததால், அந்த 4 ஏக்கர் நிலத்தை அந்த நபரின் மனைவி மற்றும் மற்றொரு பெண் பெயரில் கிரையம் செய்ததாகவும் தெரிகிறது. மேலும் அந்த 4 ஏக்கர் நிலம் சமீபத்தில் வேறு 2 பேருக்கு மறுகிரையம் செய்யப்பட்டு உள்ளது. இதில் சடையப்பனின் கூட்டாளிகள் ஒன்று சேர்ந்து தன்னை ஏமாற்றி விட்டதாக ராமநாதன் உணர்ந்தார்.

இது குறித்து சடையப்பனிடம் சென்று ராமநாதன் கேட்டதாக தெரிகிறது. ஆனால் சடையப்பன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் சேர்ந்து ராமநாதனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாககூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நில மோசடி செய்ததாக சடையப்பனை கைது செய்தனர். மேலும், இதில் தொடர்பு உடைய தாக 7 பேரை போலீ சார் வலைவீசி வருகிறார்கள்.

Tags:    

Similar News