கொடிவேரி தடுப்பணையில் ஆகாய தாமரை செடிகளால் சுற்றுலாப் பயணிகள் அவதி
கொடிவேரி தடுப்பணையில் ஆகாயத்தாமரை செடிகள் குவியலாக தேங்கி தடுப்பணையில் குளித்த சுற்றுலாப் பயணிகள் மீது விழுந்ததால் அவதியடைந்தனர்.
கொடிவேரி தடுப்பணையில் ஆகாயத்தாமரை செடிகள் குவியலாக தேங்கி தடுப்பணையில் குளித்த சுற்றுலாப் பயணிகள் மீது விழுந்ததால் அவதியடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரியில் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கொடிவேரி தடுப்பணை ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இந்த தடுப்பணைக்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து தடுப்பணையில் அருவி போல் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வர்.
கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகளுக்கு மீண்டும் தொடர்ந்து சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை பக்ரீத் பண்டிகை என 3 நாட்கள் தொடர்ந்து விடுமுறை விடப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் தடுப்பணைக்கு காலை முதலே சுற்றுலாப் பயணிகள் பலர் வந்து குளித்து மகிழ்ந்தனர்.
இதனிடையில், ஆகாயத்தாமரை செடிகள் கொடிவேரி தடுப்பணையின் மேல் குவியலாக தேங்கியது. அவ்வாறு தேங்கிய ஆகாயத்தாமரை செடிகள் தடுப்பணைக்கு கீழே குளித்த சுற்றுலாப் பயணிகள் மீது விழுந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர். இதனால், நீர்வள ஆதாரத்துறையினர் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.