ஈரோடு மாவட்டத்தில் ஐடிஐக்களில் மாணவர் சேர்க்கை: கால அவகாசம் 13ம் தேதி வரை நீட்டிப்பு
Erode news- ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு, தனியார் ஐடிஐக்களில் மாணவர் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் 13ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு, தனியார் ஐடிஐக்களில் மாணவர் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் 13ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள 2 அரசு மற்றும் 11 தனியார் ஐடிஐக்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களிலும் மாணவ, மாணவியர்கள் சேர உதவி மையம் மூலம் ஆன்லைனில் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வெல்டர், வயர்மென், மெக்கானிக் டீஸல், பிளம்பர் போன்ற பிரிவுகளுக்கு 8ம் வகுப்பிலும், எலக்ட்ரீசியன், பிட்டர், மெசினிஸ்ட், டர்னர், மோட்டார் மெக்கானிக் வெகிக்கிள்,ஏசி மெக்கானிக், கோபா, டிராப்ட்ஸ்மென் சிவில் போன்ற தொழிற் பிரிவுகளுக்கு மற்றும் தொழிற்சாலைகளின் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தொடங்கப்பட்ட டெக்னாலஜி சென்டர் இண்டஸ்டிரிஸ் 4.0வில், பேசிக் டிசைனர் & விர்ச்சுவல் வெரிஃபையர், அட்வான்ஸ்டு சிஎன்சி மேஷினிங்,மெக்கானிக் எலக்ட்ரிக் வெகிக்கிள், இண்டஸ்டிரியல் ரோபாட்டிக்ஸ் & டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீசியன், மேனுபேக்சரிங் பிராசஸ் கண்ட்ரோல் & ஆட்டோமேசன் ஆகிய 05 தொழிற்பிரிவுகளுக்கும் 10ம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாணவர்கள் தங்களின் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், செல்போன் எண், இமெயில் ஐடி, ஆதார் அட்டை மற்றும் முன்னுரிமை கோரினால் அதற்கான முன்னுரிமைச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் ஈரோடு காசிபாளையம் சென்னிமலை ரோடு மற்றும் கோபிசெட்டிபாளையம் வீரசின்னானூர் பெரிய கொடிவேரியில் உள்ள அரசு ஐடிஐக்களில் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஈரோடு அரசு ஐ.டி.ஐ. வளாகம் ஆகிய சேர்க்கை உதவி மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம் ரூ.50ஐ டெபிட் கார்டு, கூகுள் பே அல்லது நெட் பேங்கிங் வாயிலாக செலுத்தலாம். பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.750, பாடநூல், சைக்கிள், சீருடை, வரைபடக்கருவி, காலணி, பஸ் பாஸ் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பெண் பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும். பயிற்சி முடித்த பின், முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு, அப்பரண்டிஷிப் பெற்றுத்தரப்படும் மகளிருக்கு குறைந்தபட்ச வயது 14 மற்றும் வயது உச்சவரம்பு இல்லை. ஆண்களுக்கு 14 வயது முதல் 40 வயது வரை ஆகும். விண்ணப்பிக்க நீட்டிக்கப்பட்ட கடைசி நா 13.06.2024 தேதியாகும்.
எனவே, மாணவ, மாணவியர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.