ஆதிதிராவிடர், பழங்குடியின மக்கள் புகார் தெரிவிக்க உதவி எண்கள்: ஈரோடு ஆட்சியர் தகவல்!

Erode news- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து, புகார் அளிக்க உதவி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Update: 2024-10-28 09:45 GMT

Erode news- ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா. (கோப்பு படம்)

Erode Today News, Erode Live Updates, Erode News- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து, புகார் அளிக்க கட்டணமில்லா உதவி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (28ம் தேதி) திங்கட்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த புகார் அளிக்கவும், சட்ட ஆலோசனைகள் வழங்கவும் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய உதவிமையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் சாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த நபர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர் சார்பாக தகவல் தெரிவிப்போர் வழக்கு பதிவு செய்தல் மற்றும் தீருதவிகள் தொடர்பான முறையீடுகளை பின்வரும் கட்டணமில்லா தொலைபேசி எண்களை பயன்படுத்தி அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக அலுவலக நாட்களில் அலுவலக பணிநேரத்தில் புகார்களை பதிவு செய்ய 18002021989 அல்லது 14566 என்ற உதவி எண்ணை அழைக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News