அந்தியூர் அடுத்த பர்கூர் கொங்காடை கிராமத்திற்கு கூடுதல் பேருந்து சேவை
Erode news- ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து கொங்காடை கிராமத்திற்கு கூடுதல் பேருந்து சேவையை சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் தொடங்கி வைத்தார்.;
Erode news- கூடுதல் பேருந்து சேவையினை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
Erode news, Erode news today- அந்தியூரில் இருந்து கொங்காடை கிராமத்திற்கு கூடுதல் பேருந்து சேவையை சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் வெள்ளிக்கிழமை (இன்று) அதிகாலை தொடங்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட பர்கூர் மலைக் கிராம ஊராட்சியில் மேற்கு மலைப் பகுதிகளான கொங்காடை, செங்குளம், சின்ன செங்குளம், பெரிய செங்குளம், ஆலனை, பெரியூர், ஓசூர், கோவில் நத்தம், தம்முரெட்டி உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்கள் உள்ளன.
இந்தப் பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், அந்தியூர் முதல் கொங்காடை வரை ஒரு பேருந்து சேவை துவங்கப்பட்டு சென்று வருகிறது. இந்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் பல்வேறு ஆய்வு பணிகளுக்காக மலைப் பகுதிகளுக்குச் செல்லும் பொழுது தங்களது பகுதிக்கு கூடுதலாக ஒரு பேருந்து சேவையை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று பள்ளி மாணவ- மாணவிகள், பொதுமக்கள் கோரிக்கை மனு வழங்கினார்.
இதனையடுத்து, மலைக் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று அந்தியூரில் இருந்து மணியாச்சி வழியாக கொங்காடை வரை கூடுதல் பேருந்து சேவையினை சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் கொடியசைத்து தொடங்கி வைத்து பேருந்தில் பயணம் செய்தார். இந்நிகழ்ச்சியில், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.