ஈரோடு: ஊரக உள்ளாட்சி நிர்வாக 3 மாத சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு

ஈரோடு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி நிர்வாகம் குறித்த 3 மாத சான்றிதழ் படிப்பை படிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-07-23 13:00 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி நிர்வாகம் குறித்த 3 மாத சான்றிதழ் படிப்பை படிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசு வழி காட்டுதல்படி. மறைமலைநகர் மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனம் மூலம் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் பற்றிய விவரங்கள், ஊராட்சி நிர்வாகம், நிதி மேலாண்மை, நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் குறித்து ஊரக உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி திட்டங்கள் ஆகியன அடங்கிய 3 மாத சான்றிதழ் படிப்பு நடத்தப்பட உள்ளது.

இச்சான்றிதழ் படிப்பில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தனி நபர்கள், அனைத்து கிராம ஊராட்சி செயலர்கள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட அளவிலான பயிற்சி பெறுநர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம்.இதில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய , மாநில அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் கற்றுத்தரப்படும்.

இப்பயிற்சிக்கான புத்தகங்கள் மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தால் வழங்கப்படும். இப்பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் ஈரோடு மாவட்ட பயிற்றுநர் மூலமாக இணைய வழியில் ரூ.1000 செலுத்தி விண்ணப்பத்தினை ஈரோடு உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வள மைய அலுவலரை‌ 6369467746 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News