பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் கல்விசார் விருது வழங்கும் விழா

Erode news- ஈரோடு மாவட்டம் பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் கல்விசார் சிறப்பு விருது வழங்கும் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

Update: 2024-05-25 11:00 GMT

Erode news- கல்விசார் சிறப்பு விருது வழங்கும் விழாவில் எடுக்கப்பட்ட படம்.

Erode news, Erode news today- பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் கல்விசார் சிறப்பு விருது வழங்கும் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

கொங்கு வேளாளர் தொழில்நுட்பக்கல்வி அறக்கட்டளை சார்பில், கல்விசார் சிறப்பு விருது வழங்கும் விழா ஈரோடு மாவட்டம் பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியின் கொங்கு பல்கலை மையத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இவ்விழாவின் போது, கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

அறக்கட்டளை சார்பில், கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி, கொங்கு பொறியியல் கல்லூரி, கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கொங்கு தனியார் தொழில் பயிற்சி நிறுவனம், கொங்கு நேஷனல் மெட்ரிக் பள்ளி, கொங்கு கட்டிடக் கலைக் கல்லூரி, கொங்கு இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி ஆகிய 7 கல்வி நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிறுவனங்களில் பயிலும் மாணவர்களில், ஒவ்வொரு ஆண்டிலும் படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு 5 சதவீதம் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, கோவை வருமான வரித்துறை இணை ஆணையர் ஆதவன் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 3.98 கோடி அளவிலான ஊக்கத்தொகையினை, 1,153 மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.

இவ்விழாவில், அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் குமாரசாமி, செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் வீரவிசங்கர், அனைத்து கல்வி நிறுவனங்களின் தாளாளர்கள், அறக்கட்டளையின் பாரம்பரிய உறுப்பினர்கள், கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News