கோபியில் போலீசாரை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரினை விசாரிக்க மறுத்த ஆய்வாளரை கண்டித்து கோபி காவல் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரினை விசாரிக்க மறுத்த ஆய்வாளரை கண்டித்து கோபி காவல் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குடும்ப தகராறு காரணமாக கணவன் மீது புகார் அளிக்க இளம்பெண் ஒருவர் தனது தாயாருடன் வந்திருந்தார்.
இந்நிலையில், அந்த இளம்பெண் கொடுத்த புகாரின் மீது கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உள்ள ஆய்வாளர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி புகார் அளித்த பெண்ணின் தாயார் திடீரென கோபி சத்தி நெடுஞ்சாலையின் குறுக்கே அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்.
இதனையடுத்து, காவல் நிலையத்தில் இருந்த பெண் காவலர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது, மகளிர் காவல் நிலையத்தில் அவரின் புகார் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என ஆய்வாளர் கூறியதாக தெரிவித்தார்.
பின்னர், போலீசார் அவர் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறிய சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்ட அந்த பெண்ணை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
புகார் கொடுக்க வந்த காவல் நிலையத்தின் முன்பே பெண் ஒருவர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.