பவானிசாகர் அருகே வனத்துறையினர் வாகனத்தை தாக்க வந்த காட்டு யானை
ஈரோடு மாவட்டம் தெங்குமரஹாடா சாலையில் வனத்துறையினர் வாகனத்தை தாக்க வந்த யானை வனப்பகுதிக்குள் திரும்பிச் சென்றது.
ஈரோடு மாவட்டம் தெங்குமரஹாடா சாலையில் வனத்துறையினர் வாகனத்தை தாக்க வந்த யானை வனப்பகுதிக்குள் திரும்பிச் சென்றது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் அவ்வப்போது வனப்பகுதியில் உள்ள சாலைகளில் நடமாடுவது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் பவானிசாகரில் இருந்து தெங்குமரஹாடா செல்லும் ரோட்டில் வனத்துறையினர் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சுஜ்ஜல்குட்டை என்ற இடத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஒற்றை ஆண் யானை வனத்துறையினரின் வாகனத்தை நோக்கி ஓடி வந்து தாக்க முயன்றது.
அப்போது, வனத்துறையினர் தொடர்ந்து ஹாரன் ஒலி எழுப்பி யானைக்கு பயத்தை ஏற்படுத்தினர். அந்த சப்தத்தைக் கேட்டு பயந்து யானை பின்னோக்கி நகர்ந்த படி சென்றது. வனத்துறையினர் தொடர்ந்து வாகனத்தில் முன்னேறிச் சென்றதால் பயந்த யானை அங்கிருந்து வனத்துக்குள் ஓடி மறைந்தது. தற்போது இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.