தாளவாடியில் 6ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம் 6ம் தேதி (புதன்கிழமை) தாளவாடியில் நடைபெற உள்ளது.;
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம் 6ம் தேதி (புதன்கிழமை) தாளவாடியில் நடக்கிறது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா திங்கட்கிழமை (இன்று) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகள் ஒருங்கிணைத்த மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இச்சிறப்பு முகாம் மார்ச் 6ம் தேதி புதன்கிழமையன்று தாளவாடியில் உள்ள அரசு பயணியர் மாளிகையில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (யு.டி.ஐ.டி) அதற்கான பதிவு, மருத்துவ சான்றுடன் தேசிய அடையாள அட்டை அனைத்து துறைகள் தொடர்பான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.
எனவே, மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை (நீலநிறம்), ஆதார் அட்டை, புகைப்படம் -2 ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம். மேலும், இந்த சிறப்பு ஒருங்கிணைந்த மருத்துவ முகாமில், மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.