ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் சிறப்புச் சொற்பொழிவு

Erode News- ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் என் ஜன்னலுக்கு வெளியே என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-08-10 10:30 GMT

Erode News- கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட படம்.

Erode News, Erode News Today- ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் உள்தர உறுதிக் கட்டமைப்பு மற்றும் தமிழ்த்துறையும் இணைந்து சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் தாளாளர் பி.டி.தங்கவேல் தலைமை தாங்கினார். கொங்கு பொறியியல் கல்லூரியின் தாளாளர் ஏ.கே.இளங்கோ வாழ்த்துரை வழங்கினார்.

கல்லூரியின் முதல்வர் ஹெச்.வாசுதேவன் முன்னிலை வகித்தார். கல்லூரியின் உள்தர உறுதிக் கட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே.கே.ஏ.அழகுஅப்பன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் படைப்பாளர் மற்றும் கதை சொல்லி பவா செல்லதுரை கலந்து கொண்டு என் ஜன்னலுக்கு வெளியே எனும் தலைப்பில் பேசினார்.


மாணவ, மாணவிகள் வகுப்பறை கல்வியோடு உலக வாழ்க்கை அனுபவங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒரு கனவு வாழ்க்கை இருக்கிறது. அதை அனைவரும் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும், ஓய்வு நேரங்களில் பெண்கள் தாய் தந்தையுடன் பேசி மகிழ வேண்டும்.

தன் பிள்ளைகளின் ஆசை, கனவு என்ன என்பதை ஒவ்வொரு பெற்றோரும் உணர்ந்து வைத்திருக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சி முடிவில் தமிழ்த்துறை தலைவர் ப.தினகரன் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வில் 750க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று பயன் பெற்றனர்.

Tags:    

Similar News