அம்மாபேட்டை அருகே சாராய பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது
Erode news- ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே அரசால் தடை செய்யப்பட்ட சாராயத்தை விற்பனைக்காக வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
Erode news, Erode news today- பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே சாராய பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பெரியசாமி தலைமையிலான போலீசார் நேற்று (27ம் தேதி) ரோந்து சென்றனர். அப்போது, பி.கே.புதூர் பாலமலை அடிவாரப் பகுதியில் சாராய விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் வெள்ளை நிற சாக்கு மூட்டையுடன் இருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில், அவர் சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுக்கா கொளத்தூர் அருகே உள்ள பாலமலை நமன்காடு பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் தர்மலிங்கம் (வயது 46)) என்பதும், அவர் விற்பனைக்காக 6 லிட்டர் 300 மில்லி சாராயத்தை 14 பாக்கெட்டுகளில் நிரப்பி கொண்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 6.3 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், தர்மலிங்கத்தை பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.