ஈரோட்டில் ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் பெருந்திரள் முறையீடு
தமிழ்நாடு ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு இன்று பெருந்திரள் முறையீடு நடந்தது.
தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில், ஈரோடு - சென்னிமலை சாலையில் உள்ள மாவட்ட தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு இன்று (27ம் தேதி) பெருந்திரள் முறையீடு நடந்தது.
ஈரோடு சென்னிமலை சாலையில் உள்ள ஈரோடு மாவட்ட தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் பெருந்திரள் முறையீடு நடந்தது. ஏஐடியுசி மாநில செயலாளர் சின்னசாமி தலைமை வகித்தார்.
வாரிய முடிவுகளை வாரியமே நிறைவேற்ற தன்னாட்சி அதிகாரத்தை வாரியத்திற்கு வழங்க வேண்டும். நல வாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் சட்டத்தில் உள்ளபடி இஎஸ்ஐ மருத்துவ வசதி வழங்க வேண்டும். ஓய்வூதியமாக மாதம் 2000 ரூபாய் வழங்க வேண்டும்.
வீட்டு வசதி திட்டத்தை துவங்கி மூன்று ஆண்டுகள் கடந்தும் திட்டங்களை நிறைவேற்றாத அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிமாநில தொழிலாளர் வருகை வரம்பினை கட்டுப்படுத்தி 80 சதவீதம் வேலைகளை உள்ளூர் தொழிலாளர்களுக்கு கட்டாயம் வழங்கும் வகையில் தமிழக அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும்.
வேலை செய்யும் இடத்தில் நிகழும் விபத்தில் மரணம் அடையும் மற்றும் ஊனமுடையும் தொழிலாளர்களுக்கு இழப்பீடு சட்டப்படி முழு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கோஷங்களை எழுப்பினர்.