ஈரோட்டில் நாளை வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாரத்தான் போட்டி

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் போதை கலாசாரத்துக்கு எதிரான மாரத்தான் போட்டி ஈரோட்டில் நாளை (11ம் தேதி) நடக்கிறது.

Update: 2024-08-10 01:45 GMT

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஈரோடு மாவட்ட இளைஞரணி சார்பில் போதை கலாச்சாரத்துக்கு எதிரான தொடர் ஓட்டம்.

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் போதை கலாசாரத்துக்கு எதிரான மாரத்தான் போட்டி ஈரோட்டில் நாளை (11ம் தேதி) நடக்கிறது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட இளைஞரணி சார்பில், போதை கலாசாரத்துக்கு எதிரான மாரத்தான் போட்டி ஈரோடு தொட்டம்பட்டியில் நாளை (11ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு நடக்கிறது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா 10 கி.மீ தொடர் ஓட்டத்தையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் 5 கி.மீ ஓட்டத்தையும் தொடங்கி வைக்க உள்ளனர்.

அதனைத்தொடர்ந்து பரிசளிப்பு விழா நடக்கிறது. விழாவுக்கு இளைஞரணி மாவட்ட தலைவர் நெல்லை ஆ.ராஜா தலைமை தாங்குகிறார். பேரமைப்பின் இளைஞரணி மாவட்ட செயலாளர் அ.லாரன்ஸ் ரமேஷ் வரவேற்புரை ஆற்றுகிறார். வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பரிசுகளை வழங்குகிறார்.

தொடர்ந்து, போதை கலாச்சாரம் என்ற நூலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வெளியிடுகிறார். அதனை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பெற்றுக் கொள்கிறார். விழாவில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக எக்ஸல் கல்வி குழுமத்தின் நிறுவனர் நடேசன், மாநகராட்சி ஆணையாளர் மனிஷ், உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் தங்கவிக்னேஷ்,  மாநகர் மருத்துவ அலுவலர் பிரகாஷ், வணிகர் சங்க பேரமைப்பின் கோவை மண்டலத் தலைவர் சூலூர் சந்திரசேகரன்,மாநில கூடுதல் செயலாளர் ராஜகோபால், மாநில துணைத் தலைவர் திருமூர்த்தி உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

விழா ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை மாவட்டத் தலைவர் இரா.க.சண்முகவேல், செயலாளர் பொ.இராமச்சந்திரன், பொருளாளர் உதயம் பொ.செல்வம், மாநகரத் தலைவர் அந்தோணி யூஜின், செயலாளர் பாலமுருகன் ஆகியோர் செய்து வருகின்றனர். விழாவின், மாவட்ட இளைஞரணி பொருளாளர் சி.சேகர் நன்றி கூறுகிறார்.

Tags:    

Similar News