கோபி அருகே சிறுமியிடம் சில்மிஷம் செய்த கூலித்தொழிலாளி போக்சோவில் கைது

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே 9 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த கூலித்தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-05-22 10:45 GMT

கைது செய்யப்பட்ட முனியன்.

கோபிசெட்டிபாளையம் அருகே 9 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த கூலித்தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த ஆப்பக்கூடல் அருகே உள்ள கீழ்வாணி பகுதியைச் சேர்ந்தவர் முனியன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவர், நேற்று மது போதையில் கோபி அருகே கலிங்கியம் பகுதியில் உள்ள கோவில் பின்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட முயன்றுள்ளார்.

இதைப்பார்த்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து ஓடி சென்று முனியனை அடித்து உதைத்து கோபி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர், இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய ஆய்வாளர் பழனியம்மாள் விசாரணை நடத்தி, முனியனை போக்சோ சட்டத்தின் கீழ், வழக்குப் பதிவு செய்து கைது செய்தார்.

பின்னர், முனியனை ஈரோடு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ஜூன் 4ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து, போலீசார் முனியனை கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News