பவானி அருகே மழையால் சாலையோர பள்ளத்தில் பாய்ந்த அரசு பேருந்து

Erode news- ஈரோடு மாவட்டம், பவானி அருகே லட்சுமி நகரில் பெய்த மழையால் அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.;

Update: 2023-10-30 05:15 GMT

Erode news- பவானி லட்சுமிநகரில் பள்ளத்தில் இறங்கிய அரசு பேருந்து.

Erode news, Erode news today- பவானி அருகே லட்சுமிநகரில் பெய்த மழையால் அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக் கொண்டு அரசு பேருந்து ஒன்று கோயமுத்தூர் நோக்கி ஞாயிற்றுக்கிழமை (நேற்று) மதியம் சென்று கொண்டிருந்தது. அப்போது, பவானி அருகே சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் லட்சுமி நகர் பைபாஸில் சென்று கொண்டிருக்கும்போது முன்னால் சென்ற காரை பேருந்து முந்தி செல்ல முயன்றது. அப்போது அந்த பகுதியில் மழை பெய்ததால் நிலை தடுமாறிய பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கால்வாய் பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 40க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இவ்விபத்து காரணமாக சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் எந்த வாகனங்களும் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதுகுறித்த தகவலறிந்து வந்த சித்தோடு காவல் ஆய்வாளர் முருகையா மற்றும் போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் மாரிமுத்து ஆகியோர் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர், மீட்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு அரசு பேருந்து மீட்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News