கோபி அருகே பரிதாபமாக மின்வேலியில் சிக்கி இறந்த மக்னா யானை: விவசாயி கைது!
Erode news- ஈரோடு மாவட்டம் கோபி அருகே மின்வேலியில் சிக்கி மக்னா யானை பரிதாபமாக இறந்தது, தொடர்பாக மின்வேலி அமைத்து நேரடி மின்சாரம் பாய்ச்சிய விவசாயியை வனத்துறையினர் கைது செய்தனர்.
Erode news, Erode news today- கோபி அருகே மின்வேலியில் சிக்கி மக்னா யானை பரிதாபமாக இறந்தது, தொடர்பாக மின்வேலி அமைத்து நேரடி மின்சாரம் பாய்ச்சிய விவசாயியை வனத்துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள டி.என்.பாளையம் அருகேயுள்ள பங்களாப்புதூர் எருமை குட்டை வனப்பகுதியை ஒட்டியுள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் போடப்பட்ட மின் வேலியில் சிக்கி கடந்த 16ம் தேதி காலை சுமார் 9 மணியளவில் மக்னா யானை ஒன்று இறந்து கிடந்தது.
இதுகுறித்து டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழு சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். உடலை மீட்ட வனத்துறையினர் மின்வேலி அமைத்த உரிமையாளர் யார் என்றும், மின் வேலியில் நேரடி மின்சாரம் செலுத்தப்பட்டதா? என்றும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், பங்களாப்புதூர் அண்ணாநகரைச் சேர்ந்த உறவினர்களான சசிக்குமார் (வயது 45), பங்களாப்புதூரைச் சேர்ந்த பெரியசாமி (வயது 56) இருவரும் நேரடி மின்சாரம் செலுத்தி மக்னா யானனையை கொன்றது வனத்துறையினர் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் கைது செய்யப்பட்டு நபர்களின் விவசாய தோட்டத்தில் சுற்றிலும் போடப்பட்ட பென்சிங்-ஐ யானை உடைப்பதும், அவர்கள் தோட்டத்தில் போடப்பட்ட இருந்த கரும்புகளை உடைத்து சாப்பிடுவதும் யானை அப்பகுதியை சுற்றிலும் சுற்றி வந்ததும், அங்கே தனியார் கல்லுரிக்கு சொந்தமான இடத்தில் வைக்கப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
தொடர் விசாரணையில், சசிக்குமார் மற்றும் பெரியசாமி இருவரின் விவசாய தோட்டத்தில் போடப்பட்ட பயிர்களை சேதப்படுத்தி வந்ததால் யானை வழக்கமாக வரும் வழி தடங்கள் வழியாக கம்பிகள் கட்டியுள்ளனர். பிறகு ஃபோர்வெல்லில் இருந்து நேரடியாக மின்சாரம் எடுத்து கம்பிகள் வழியாக உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நேரடி மின்சாரத்தை கம்பிகள் வழியாக செலுத்தி மக்னா யானனையை இருவரும் கொன்றதாக கைது செய்யப்பட்ட சசிகுமார், வாக்குமூலமாக வனத்துறையிடம் ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து, டி.என்.பாளையம் வனச்சரகர் ஜான் பீட்டர் தலைமையிலான வனத்துறையினர் சசிகுமார்-ஐ நேற்று முன்தினம் மாலை கைது செய்து, கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மாவட்ட சிறையில் அடைத்தனர். முன்னதாக நடந்த யானையின் பிரேத பரிசோதனையில் மக்னா யானையின் வயிற்றில் கரும்புகள் இருந்ததும், கைது செய்யப்பட்டு நபர்களின் விவசாய தோட்டத்தில் கரும்பு பயிரிட்டு இருந்ததும் மற்றும் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவும் குற்றவாளியை கண்டு பிடிக்க மிகவும் உதவியதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
முன்னதாக சட்ட விரோதமாக மின்சாரம் வைத்து யானையை கொல்ல பயன்படுத்திய மின் வயர்கள் மற்றும் கம்பிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவான பெரியசாமி என்பவரை வனத்துறையினர் தேடி வருவதாக தெரிவித்தனர். இதுபோன்று வன உயிரினங்களை கொல்ல சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் கூறினர்.